Breaking News

இன்று முதல் 9,மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் ,கல்லூரிகள் திறப்பு

அட்மின் மீடியா
0

 தமிழக பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்று(பிப்.,8) முதல், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

                                          

முன்னதாக  பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது. 

இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது. மேலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச்-15ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதித்தும் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வருமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் 

 வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் 

சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback