அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்