நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்தில் தடுப்பூசி போட்டுகொள்ளலாம்
தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்தில் கோவிட் 19 தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவன்தின் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளை ஒப்புதல் வழங்கப்பட்டு, முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது.
தற்பொழுது இரண்டாம் கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், உடல்நிலை சரியில்லாத 45 வயதை கடந்தோருக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து சேவை வரியான ரூ.100 உட்பட ரூ.250க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்