Breaking News

மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி.. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி? முழு விவரம்

அட்மின் மீடியா
0

மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும்  அதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கும் மார்ச் 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது 



மேலும் அவர்கள் தடுப்பூசி போட விரும்பினால், முன்னாதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் இவர்கள் அரசு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. 


தடுப்பூசி முன்பதிவு செய்ய:

https://www.cowin.gov.in/home


அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து அடுத்து உங்கள்  மொபைலுக்கு OTP எண் பதிவு செய்து கொள்ளுங்கள் 

அடுத்து உங்கள் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை குறிப்பிட்டு உங்க்ளின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்றுங்கள். 

45 வயதுக்கு மேற்பட்டோர் என்றால், மருத்துவரிடம் பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்கவும் 

எந்த செண்டர் வேண்டும் என்பதையும், எந்த தேதியில் தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான 

அடுத்து என்று எங்கு எப்போது உங்களுக்கான தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் வரும் அங்கு சென்று தடுப்பூசி போட்டுகொள்ளுங்கள்

மேலும் விவரங்களுக்கு  1507 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback