FACT CHECK டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டெல்லி விவசாயப் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் பங்கேற்ற இஸ்லாமியர் !! வேஷத்தை கலைக்க நேரம் இல்லாததால் அப்படியே தொழுகை செய்த காட்சி என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த புகைபடத்தில் உள்ள சம்பவம் டெல்லியில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி Shaykh Mohammed Aslam எனும் முகநூல் பக்கத்தில் சீக்கியர் தொழுகை செய்யும் காட்சி என அவர் பதிவிட்டுள்ளார்
2016 ம் ஆண்டு எங்கோ நடந்த ஒரு புகைபடத்தினை எடுத்து பொய்யாக கற்பனை கலந்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்தது என பரப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி