Breaking News

FACT CHECK : குழந்தைகளின் உடல் உறுப்பை திருடும் கும்பல் என பரவும் ஆடியோ மற்றும் புகைபட செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நண்பர்களே பாருங்கள் 5  குழந்தைகள் கிடக்கின்றது,  தமிழ்நாடு போலீஸ் தான் கண்டைனரில் இருந்து கண்டு பிடித்தார்கள், இந்த குழந்தைகளின் கிட்னி லிவரை அறுத்து எடுத்து கொண்டு துக்கி எரிந்து உள்ளார்கள் என்று  ஒரு ஆடியோவை யும் அதனுடன் கீழ் உள்ள புகைபடத்தையும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த ஆடியோ கிளிப்பில் கூறப்படும் செய்திக்கும் அந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

ஆடியோவில்,கூறும்போது ஒரு கன்டைனரில் இருந்து குழந்தைகள் மீட்டதாகவும் " பற்றி பேசுகிறான், ஆனால்  அதில் குழந்தைகளின் உடல்கள் ஒரு கிணற்றில் கிடக்கின்ற  புகைப்படத்துடன் உள்ளது 

உண்மையில் நடந்தது இது தான்

கடந்த 2018ம்  ஆண்டு அக்டோபரில், மத்திய பிரதேசத்தின் பார்வானி மாவட்டத்தின் சிக்லி கிராமத்தில் வசிக்கும் பட்டர் சிங் - தனது ஐந்து மகன்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

பல உள்ளூர் நாளிதழ்களில் வந்த செய்திகளின்படி, குற்றம் நடந்த உடனேயே பட்டர் சிங்சிங் கைது செய்யப்பட்டார்.  தனக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் இருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.  குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் இருந்தன, இதன் விளைவாக, அவரது மனைவிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.  ஆத்திரத்தில், சிங் ஐந்து குழந்தைகளையும் கொன்றேன் என போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்




அட்மின் மீடியா ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback