ஸ்மார்ட் போன் தெரியும் :ஸ்மார்ட் பல்ப் தெரியுமா சந்தைக்கு புதுசு
ஸ்மார்ட் பல்புகள் வழக்கமான பல்புகளை போன்று அறையை மட்டும் வெளிச்சப்படுத்தாது ஸ்மார்ட் பல்புகள் இன்னும் பலவற்றை செய்ய முடியும்.
இந்த ஸ்மார்ட் பல்பை நம்வீட்டில் உள்ள சாதாரணமாக B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் பல்ப்பில் நாம் வேண்டிய கலரில் வைத்து கொள்ளலாம் மேலும் இந்த ஸ்மார்ட் பல்பில் நாம் தேவைக்கு ஏற்ப்ப வெளிச்சத்தை கூட்டி குறைத்து கொள்ளலாம் சுமார் 16 லட்சம் நிறங்களை வழங்குகிறது. இதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை பல்புக்கான செயலியில் உள்ள கலர் வீல் கொண்டு தேர்வு செய்யலாம்.
மொபைல் ஆப் செயலிகள் மூலமாகவும் ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும்.
எங்கிருந்தும் இயக்கலாம் ஆம் நீங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் மின்விளக்கை அணைக்காமல் சென்று விட்டால் வெளியே இருந்தாலும் ஸ்மார்ட் பல்புகளை இயக்கி அவற்றை ஆஃப் செய்ய முடியும்.
இந்த ஸ்மார்ட் பல்ப்பானது குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் கண்ட்ரோல் உடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது விப்ரோ,லெனோவா, மற்றும் MI ஆகிய கம்பெனிகளின் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் உள்ளன்
Tags: தொழில்நுட்பம்