யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் யுடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில், பதிவு செய்த வீடியோக்களை நீக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதே போல யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்