இரவோடு இரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட ஸ்தூபியை இரவோடு இரவாக இடித்து தள்ளியதால் இலங்கை தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்