டிரைவிங் கத்துக்கனுமா!! குறைந்த கட்டணத்தில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர அழைப்பு!
அட்மின் மீடியா
0
மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள காந்திநகரில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்துடன் கூடிய இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு பெண்களாளேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு பயிற்சி பள்ளியை நேரிலோ அல்லது 044-29535177, 9445030597 ஆகிய எண்களையோ அணுகலாம்.
Tags: தமிழக செய்திகள்