மலேசியாவில் பெய்த கனமழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மக்கள்: வெள்ளக்காடன மலேசிய வீடியோ
அட்மின் மீடியா
0
மலேசியாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, பாஹாங் ஆகிய மாநிலங்களில், நாளை மறுநாள் வரை கனத்த மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
பேராக்கிலும், சிலாங்கூரிலும் நாளை வரை மழை தொடரலாம். அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தபோதும், ஜொகூரின் 7 வட்டாரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளுவாங், மெர்சிங் நகரங்களுக்கு இடையே சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது.Tags: வெளிநாட்டு செய்திகள்