Breaking News

வாட்ஸ்அப் ,பேஸ்புக்கை தடை செய்ய வேண்டும் : அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0

 வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய கொள்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது




சமீபத்தில் வாட்ஸ்அப்  தனது புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி இந்த கொள்கைகளை ஒப்புக் கொள்வோர் மட்டுமே இனி வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை ஒப்புக் கொள்ளாதோர் கணக்குகள் உடனடியாக முடக்கவும் வாய்ப்புள்ளது

.இந்த புதிய கொள்கையின்படி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும்,தகவல்கள், செய்திகள், படங்கள், வீடியோக்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டு அவை முகநூலுடன் பகிரப்பட உள்ளது.  

இந்த அறிவிப்பால் பலர் வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகி வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.

இதுதொடா்பாக அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் நேற்று மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில் 

இந்த சம்மேளனம் வாட்ஸ்அப் நிறுவன புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மக்களின் தனித்துவம் பாதிக்கப்படும். எனவே இந்த விவகாரத்தைத் தீவிரமாக அரசு கருத வேண்டும். உடனடியாக வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் 

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வணிகர்கள் கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.வாஸ்ட்அப் பயனர் தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சங்கம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.  


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback