ரூ.859 சலுகை கட்டணத்தில் விமான பயணம்: கோஏா் அறிவிப்பு
கோஏா் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டில் ரூ.859 கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
குடியரசு தினத்தை முன்னிட்டு குறுகிய கால சிறப்பு சலுகையாக ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே இந்த சலுகை கட்டணம் பொருந்தும்.
இந்த திட்டத்தில் முன்பதிவு செய்து கொள்பவா்கள் ஏப்ரல் 1 முதல் டிசம்பா் 31 வரையில் எப்போது வேண்டுமானாலும் தங்களது விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம். என கோஏா் தெரிவித்துள்ளது.
Experience the freedom to travel again! ✈️#FlyFearless with our Republic Day Freedom SALE at fares starting just ₹859* and enjoy zero change fees!
— GoAir (@goairlinesindia) January 22, 2021
For T&C, please refer to https://t.co/0fTA5swRMW
Book now - https://t.co/gAQiJL8MB9 pic.twitter.com/MmuvwUxrlq
Tags: முக்கிய அறிவிப்பு