தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் செய்தி வெளியிட்டுள்ளது அதன்படி....
2-ம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
3-ம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்
4ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்
5ம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்