Breaking News

கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

கடந்த நவம்பர் 5-ம் தேதி மத்திய அரசு கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் மூலம்  கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட  யுபிஐ பரிவர்த்தனை செயல்முறைகளின் மொத்த அளவுகளில் 30% அளவிற்கு மட்டுமே அடுத்த மாதத்திற்கு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிர்ணயம் விதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிட்டது

இந்த 30% கேப் என்பது பயனர்கள் கட்ட வேண்டிய கட்டணம் அல்ல. 

ஆனால்  ஒரு மூன்றாம் தரப்பு செயலியின் கட்டாய அளவு வரம்பான 30 சதவீதத்தை எட்டிய பிறகு என்ன நடக்கும் என்று என்பிசிஐ தெளிவுப்படுத்தவிலை. 

மேலும் கூகுள் பே வழியாக நடக்கும் எந்தவொரு பரிவர்தனைகளுக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கபடமாட்டாது என google support தளத்தில் தெளிவுபடுத்திஉள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.npci.org.in/PDF/npci/press-releases/2020/UPI-balances-consumer-experience-with-growth-for-TPAPs.pdf


https://support.google.com/pay/merchants/answer/6288971?hl=en#:~:text=Google%20Payment%20Corp.,card%2Dnot%2Dpresent%20transactions.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback