வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C50 ராக்கெட்.! live VIDEO
தகவல் தொடர்புக்கான சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளுடன், 'பி.எஸ்.எல்.வி. சி-50' ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோள், அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
6 உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்ட 'பி.எஸ்.எல்.வி. சி-50' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 3.41 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
சி.எம்.எஸ்.01 செயற்கைகோள், 1.400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும். தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ விண்ணில் ஏவிய 42வது செயற்கைகோள் இதுவாகும்.
தகவல் தொடர்புக்காக கடந்த 2011- ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோள் ஆயுள் காலம் முடிந்தது நிலையில், தற்போது சிஎம்எஸ் -01 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்