Breaking News

வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு தானாக டெலிட் ஆகிவிடும்.!!! பிப்.8 முதல் நடைமுறை

அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவர உள்ளது.

அது வாட்ஸ்அப்பின் terms and privacy policy updates- ஐ கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லை என்றால் உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியுள்ளது. 

மேலும் இந்த புதிய நிபந்தனைகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அதற்கு முன்பு எச்சரிக்கைத் தகவல் வெளியாகும் என்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டால்தான் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
வாட்ஸப் பயன்பாட்டைத் தொடர்ந்து அணுக விரும்பினால், பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் புதிய விதிமுறைகளுக்கு must agree கிளிக் செய்து கட்டாயம் உடன்பட வேண்டும் என தெரிவித்துள்ளது


source:

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback