IAS படிக்கணுமா? ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு
பாரதியார் பல்கலை.யில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புப்பில்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இதற்கான முழு நேர இலவசப் பயிற்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் பிப். 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் வரும் ஜன. 30-ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க:
https://cdn.b-u.ac.in/ias/screentest2021.pdf
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்துதேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பவேண்டும்
தபால் அணுப்பவேண்டிய முகவரி:
பாரதியார் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி இயக்குநர்,
அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம்,
நாச்சிமுத்து அரங்கம்,
கோவை-46
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.01.2020
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.b-u.ac.in/ias/screentest2021.pdf
Tags: கல்வி செய்திகள்