FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பெங்களூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பெயர் Humus சூப்பர் மார்க்கெட் ஆகும் மேலும் அது ஓர் தனி நபர் ஆரம்பித்திருக்கும் சூப்பர்மார்க்கெட் ஆகும்
அந்த பகுதியில் அருகில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகள் வாங்கி விற்பனை செய்து வருகின்றார்கள்
மேலும் வித்தியாசமாக சூப்பர் மார்க்கெட்டில் தள்ளுவண்டி மாடலில் வைத்துள்ளார்கள்
அதனை பார்த்து சிலர் பொய்யாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி