Breaking News

#BREAKING |தமிழகத்தில் ஜன.31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


மேலும், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 



காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் அதாவது 16-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1 முதல் அனுமதி; மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும்

அனைத்து வழிபாட்டுத்தலங்களில் நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்தி, வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்ற அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்



உள் அரங்குகளில் 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அனுமதி 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback