Breaking News

மஹாராஷ்டிராவில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு

அட்மின் மீடியா
0


 கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இரவு நேர ஊரடங்கு முதலில் தளர்த்தப்பட்டு அதன் பின் பகல் நேரத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அதாவது இரவு 11 மணி முதல் 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது 

Give Us Your Feedback