ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தமிழக அரசின் தடை தொடரும்: உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரனையில் தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன் லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து, ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த நவம்பர் 21- ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டன.
அதன் மீதான இன்றைய விசாரணையில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மீதான தடைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துள்ள நீதிமன்றம் டிசம்பர் 21க்குள் இதுதொடர்பான விளக்க அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்