இந்தியாவில் முதல்முறையாக... டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சேவை... டெல்லியில் நாளை தொடக்கம்..!
அட்மின் மீடியா
0
நம் இந்திய நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை நாளை டெல்லியில் பிரதமர் தொடங்கி வைக்கின்றார்
நாளை நடைபெறும் தொடக்கவிழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
இந்த ரயிலின் சிறப்பம்சம்:
டெல்லி சான்க்யபுரி-பொட்டானிக்கல் கார்டன் இடையே உள்ள வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் நாளை முதல் இயக்கப்படவுள்ளது.
இதன் மொத்த தூரம் 38 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் தானியங்கி தொழில்நுட்ப வசதியுடன் மெட்ரோ ரயில் இயங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இப்போது தான் இந்தியாவில் அறிமுகமாகிறது.
Tags: இந்திய செய்திகள்