Breaking News

சட்டமன்றத்தில் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

அட்மின் மீடியா
0

3புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டமன்ற்த்தில்  தீர்மானம்  நிறைவேற்றினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 


மேலும் 3 புதிய வேளான் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

இன்று டெல்லி சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில்,விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டமன்றத்திற்குள் கிழித்தெரிந்தார். 

இவரைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மேலும் அவர் பேசுகையில், கொரோனா காலத்திலும் அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பினார்


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback