வலுவிழந்தது புரெவிபுயல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து உள்ளது புரெவி புயல்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புதிய புயலாக மாரியது இந்த புயலுக்கு புரெவி என்ற பெயரிடபட்டது
திரிகோணமலையில் கரையை கடந்த இந்த புரேவி புயல், பாம்பன்- குமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கபட்டது இந்நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்