டாக்டர் கபீல்கான் விடுதலையை எதிர்த்த உத்தரப்பிரதேச அரசின் மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்
மருத்துவர் கபீல்கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய உத்தரப்பிரதேச அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர். கபீல் கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் கபீல் கானை விடுவிப்பதற்கான மனுவின் மீது பதினைந்து நாட்களுக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டிருந்தது. மருத்துவர் கஃபீல்கான் பேசியது குறித்து அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்த்தோம். அதில் அவர் எந்தவிதமான வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, வெறுப்பை விதிக்கும் விதத்திலோ பேசவில்லை. அலிகர் நகரின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமையவில்லை' எனவும் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது ஒரு நல்ல தீர்ப்பு, இந்தத் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம் எனக் கூறி உத்தரப்பிரதேச அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
Tags: இந்திய செய்திகள்