புயல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
புயல் குறித்த வதந்திகள் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நிவர் மற்றும் புரவி புயல், தமிழகத்தை தாக்கிய நிலையில் இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புயல் உருவாகுவதாக இணையத்தில் வதந்தியான செய்திகள் வெளியாகி வந்தது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த செய்தி பொய்யானது என நம் அட்மின் மீடியாவும் செய்தி வெளியிட்டது
FACTCHECK: தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல் உருவாகிறதா ?உண்மை என்ன?
இது குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், அடுத்தடுத்து புயல் தாக்கும் என வதந்தி பரப்ப கூடாது என்றும், அப்படி வதந்தி பரப்பினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்