Breaking News

FACTCHECK: தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல் உருவாகிறதா ?உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டிசம்பர் 8 ஆம் தேதி புயல் வரலாம் "Tauktao" என்று பெயர் அடுத்து டிசம்பர் 17 ஆம் தேதி புயல்வரலாம் "Yaas" என்று பெயர் .... மேலும் அடுத்து டிசம்பர் 24 ஆம் தேதி புயல் வரலாம் "Gulab"என்றும் ஜனவரி 01 ஆம் தேதி ஒரு புயல் வரலாம் "Shaheen' என்று பெயர் ...... ஜனவரி 8 ஆம் தேதி ஒருபுயல் வரலாம் "Jawad "என்று பெயர் என வானிலை நிலையம் அறிவிப்பு தமிழ்நாடு ஒரு புயல் மாநிலமாக உருவாகிறது ஐந்து புயல்கள் வரிசையாக வருகிறது என்று  ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான செய்தி.

தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே கன மழை, புயல் ஆகிய இயற்கை காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் நிவர், புரெவி புயல் ஏற்பட்டதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் பல பாதிப்படைந்த நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் சரி கட்டப்படாத நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.

மேலும் அது  போன்ற எந்த  ஒரு அறிவிப்பையும்  வானிலை ஆய்வு மையம் அறிவிக்கவில்லை.

மேலும் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தன் டிவிட்டர் பக்கத்தில் இதனை பொய் செய்தி என்றும் மக்கள் யாரும் நம்பவேண்டாம் என பதிவிட்டுள்ளார்

மேலும் திருநெல்வேலி துணை காவல் கண்காணிப்பாளரும் தன் டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி யினை பொய் என்றும் யாரும் ஷேர் செய்து மக்களை பீதிக்கு உள்ளாக்காதீர்கள்  என்றும் தெரிவித்துள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


 Cut the chain of Rumors, dont forward to others. If you receive such a msg, it is pakka fake msg created by members of Whatsapp University. pic.twitter.com/TPvZok4PNM


 அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback