Breaking News

பிசி, எம்பிசி, மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

அட்மின் மீடியா
0

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் பிசி, எம்பிசி, சீர்மரபினர் சமூக மாணவ, மாணவிகள் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் சமூக மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3- ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுநிலை படிப்பு, பாலிடெனிக்னிக் கல்லூரி, தொழிற்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை அவர்கள் படித்து வரும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து, அங்கேயே கொடுக்க வேண்டும். 

கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 31- ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம்.


தமிழக அரசின் அறிவிப்பு

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121096.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback