Breaking News

புதிய வகை கொரானாவின் 7 அறிகுறிகள் என்ன?

அட்மின் மீடியா
0
பிரிட்டனில் உருமாற்றமடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு 7 புதிய அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது



கொரோனா வைரஸ் உள்பட எந்த ஒரு வைரசும் உருமாறும் என்பது இயற்கையான ஒன்றாகும்.2019 டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா இதுவரையில் பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கிறது. 


இப்போது இங்கிலாந்தில் காணப்படும் வைரசின் வடிவம் வி.யு.ஐ. 202012/01 மற்றும் பி 1.1.7 என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் அறிகுறிகள்


காய்ச்சல், 
ஜலதோஷம், 
தொண்டை வலி, 
நாவில் சுவையின்மை 
உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்பட்டுள்ளது.  

மேலும்  இவற்றுடன், 

சோர்வு, 
பசியின்மை,
தலை வலி, 
வயிற்றுப்போக்கு, 
மன குழப்பம், 
தசை வலி, 
தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்பை விட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback