Breaking News

திருப்பதியில் மயக்கமடைந்த பக்தர்கள்; 6 கி.மீ தூக்கிச் சென்று காப்பாற்றிய முஸ்லிம் காவலர்

அட்மின் மீடியா
0

திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக மலைப் பாதை வழியாக நடந்து வந்த வயதான பக்தர்கள் இருவர் மயக்கமடைந்திருந்த நிலையில், அவர்களை முஸ்லிம் காவலர் ஒருவர் 6 கி.மீ., சுமந்து சென்று காப்பாற்றியுள்ளார்.

 


கடந்த 22ம் தேதி அன்று ஒரு வயதான தம்பதியினர் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு நடந்து சென்றுள்ளனர் மலை பாதையில் நடுவே திடிரென  அவர்களுக்கு  மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியில் இருந்த ஷேக் அர்ஷத் என்ற காவலருக்கு இது குறித்த தகவல் கிடைத்து உடனே அங்கு விரைந்த அவர் வயதான அந்த தம்பதியினரை ஒருவர் பின் ஒருவராக தனது முதுகில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்று சாலையில் அவர்கலுக்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காவலர் ஷேக் அர்ஷத்தை பாராட்டியுள்ளனர். இச்செயல் அவரது பணியின் மீது அவருக்குள்ள பக்தியை காட்டுகிறது என மாநில டி,ஜி.பி., புகழ்ந்துள்ளார்.

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback