6000 ரூபாயில் ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கலாம் பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள வைகை இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பிளானடெக்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றது
நபர் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் பெறப்படும் இந்த ஹெலிகாப்டர் பயணம்,ஒத்தக்கடை யானைமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கள்ளழகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றிய பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மேலூரை அடைகிறது
இந்த ஹெலிகாப்டர் பயணத்தில் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர் கிராம பகுதியில் நடைபெறும் இந்த ஹெலிகாப்டர் பயணத்தை பார்ப்பதற்காக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த நிகழ்வை ரசித்துச் செல்கின்றனர்
விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த வான்வழி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் பயணம் 29ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் மக்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்தே இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது
நன்றி: மேலூர் செய்திகள்
Tags: வைரல் வீடியோ