அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: டிச31 க்குள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10.20 லட்ச ரூபாயில், 400 சதுர அடி பரப்பளவு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது.
திட்டம் :
அனைவருக்கும் வீடு
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தை, தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் செயல்படுத்தி வருகிறது.
இதுவரை, குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கி வந்தது. தற்போது, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்கும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்டுத்த உள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த தைலாவரம் பகுதியில், புதிய திட்டத்தை குடிசை மாற்று வாரியம் செயல்படுத்துகிறது.
தலா, 400 சதுர அடி பரப்பளவில், 480 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இந்த வீடுகளை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய, குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த வீடுகளுக்கு, 11.70 லட்சம் ரூபாய் தோராய விலையாக முடிவு செய்யப்பட்டது. இதில், மத்திய அரசின் மானியம், 1.50 லட்ச ரூபாய். இதனால், 10.20 லட்ச ரூபாயை, ஆறு தவணைகளில் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.12.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்