இன்னும் 3 மணி நேரத்தில் புரேவி புயல்.. பாம்பனில் கரையை கடக்கும்....
பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புரெவி புயல், இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் எனவும், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே இன்றிரவு அல்லது அதிகாலை, புயல் கரையைக் கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிகோணமலையில் கரையை கடந்த இந்த புரேவி புயல், பாம்பன்- குமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் அருகே 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயல், இன்னும் 3 மணிநேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே செல்லும். அப்போது, மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புரவி புயல் எப்போ எங்கே உள்ளது ?கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....
Tags: தமிழக செய்திகள்