நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எதுவுமே இல்லை- சீமான்
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.
இச்சந்திப்பில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சீமான் அளித்த பதில்: யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்க தனித்தே போட்டியிடுவோம்.
234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், இல்லை என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ரஜினிகாந்த், கமல் கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனித்தது.
Tags: தமிழக செய்திகள்