அனைத்து கார்களிலும் முன்பக்க 2 சீட்களிலும் 2 ஏர்பேக் கட்டாயம்.. மத்திய அரசு
அட்மின் மீடியா
0
கார்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு கார்களில் ஓட்டுனர் இருக்கை அருகே ஏர்பேக் அமைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், முன்பக்கம் கார்களில் 2 ஏர்பேக் அமைக்க வேண்டும் என விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரச திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான வரைவு அரசாணையை, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிய வகை மாடல் கார்களில் 2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலும், ஏற்கனவே உள்ள கார்களில் 2022 ஜூன் ஒன்றாம் தேதி முதலும் முன்பக்க பயணிகள் இருக்கைகளிலும் ஏர் பேக் அமைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: முக்கிய செய்தி