அமீரகம் டூரிஸ்ட் விசா மேலும் 1 மாதம் நீட்டித்து துபாய் ஆட்சியாளர் உத்தரவு..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரகத்தில் இருக்கும் சுற்றுலாவாசிகளின் விசாக்களை, எந்த அரசாங்க கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்க உத்தரவு அளித்துள்ளார்.
இந்த உத்தரவின் படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் அனைத்து சுற்றுலாவாசிகளின் டூரிஸ்ட் விசாக்களும் எவ்வித கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: Sheikh Mohammed @HHShkMohd orders extension of UAE tourist visas without any govt fees #NYE2021 #NewYear2021 https://t.co/7nwYZ1U7BO
— Khaleej Times (@khaleejtimes) December 28, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்