இனி ஓமான் நாட்டிற்க்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை: இந்தியா உட்பட 103 நாட்டு குடிமக்கள் ஓமான் வருகை புரிய அனுமதி..!!
ஓமான் அரசானது தனது நாட்டிற்க்கு சுற்றுலாவிற்க்காக வருகை தர விரும்பும் பயணிகளுக்கு வசதியாகவும், 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் ஓமானிற்கு வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டுள்லது.
ஓமான் நாட்டிற்க்கு சுற்றுலா செல்ல 103 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 நாட்களுக்கு நுழைவு விசாவிலிருந்து (entry visa) விலக்கு அளிக்கப்படும்
மேலும் ஓமானுக்கு வருகை தர விரும்பும் நபர்கள் ஓமானில் நுழைவதற்கு உங்கள் ஹோட்டல் முன்பதிவு, சுகாதார காப்பீடு மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் உள்ளிட்டவை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
மேலும் 103 நாடுகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், கனடா ,ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தைவான், கனடா, ஹாங் காங், ரஷ்யா, சீனா,அர்ஜென்டினா, பிரேசில், ஜப்பான், தாய்லாந்து, போன்ற நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்