Breaking News

உங்கள் லேண்ட்லைன் நம்பரையும் WhatsApp-ல் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

அட்மின் மீடியா
0

 உங்கள் லேண்ட்லைன் நம்பரையும் WhatsApp-ல் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

 


மொபைல் எண் இல்லாமல் லேண்ட்லைன் எண்ணைக் கொண்டு வாட்ஸ்அப்பை உபயோகிக்க முடியும் என்று தெரியுமா உங்களுக்கு



வாட்ஸ்அப்பில் லேண்ட்லைன் நம்பரா? எப்படி?



முதலில் உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.



அடுத்து 10 இலக்க மொபைல் எண் கேட்கும் இடத்தில் மொபைல் எண்னுக்கு பதிலாக உங்கள் லேண்ட்லைன் எண்ணை பதிவிடவும்


 அடுத்து வாட்ஸப் verification என்பது எஸ்.எம்.எஸ் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் இருக்கும். லேண்ட்லைனில் எஸ்.எம்.எஸ் வர முடியாது 


முதலில் நீங்கள் எஸ்.எம்.எஸ் என்ற ஆப்சனை பயன்படுத்தவும். 


இந்த நடைமுறை நிறைவடைந்த ஒரு நிமிடம் கழித்து, எஸ்.எம்.எஸ் அல்லது Call Me என்ற ஆப்சன் வரும். 


இப்போது Call Me என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


அடுத்து உங்களுடைய லேண்ட்லைன் எண்ணுக்கு அழைப்பு வரும். 


அதில் உங்களுக்கு 6 இலக்க verification code கூறப்படும் எண்ணை பதிவு செய்து வாட்ஸப்பை  உங்கள் லேண்ட்லைன் எண்ணில் இருந்தே உபயோகிக்கலாம்

Give Us Your Feedback