FACT CHECK: அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் தாக்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் தாக்கிய புகைபடங்கள் இரு புகைபடங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அன்வே நாயக் என்பவர் கடந்த 2018-ல்
தன்னுடைய மரணத்திற்கு
தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதற்காக அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ்
நேற்று 4-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் அடித்த புகைபடம் என சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைபடம் உண்மையில் அர்னாப் கோஸ்வாமி இல்லை
கடந்த 10.01.20 அன்று உத்தரப் பிரதேசத்தின் தேவ்ரியா மாவட்டத்தில் செல்போனை திருடிய நபரை
காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கிய புகைபடததை அர்னாப் கோஸ்வாமி என பொய்யாக பரப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
This is the @deoriapolice , viciously assaulting a young man accused of mobile theft by his neighbour , inside a police station. One cop tries to smash the man's face with his boot , the man is hit multiple times with a belt as other cops pin him down . Three cops suspended ... pic.twitter.com/hzDplXrDv0
— Alok Pandey (@alok_pandey) January 10, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி