FACT CHECK: ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா ?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்டமை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. குறித்த இறந்த கறுப்பின நபரின் மகளான அச்சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் அமெரிக்க புதிய அதிபர். மன்னிப்பதை விட, மன்னிப்பு கேட்பதே மிகப் பெரிய விடயம் எனவே பராட்டவேண்டியவர்தான்என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் பல கதைகளை பரப்பி வரும் இந்த புகைபடத்தை படத்தை ஜோ பைடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கு நல்ல சுற்றுச்சூழல், எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று பதிவிட்டு அந்த புகைப்படம் ஷேர் செய்திருந்தார்
மேலும் பீரிப் என்ற இணையதளத்தில் டெட்ராய்டில் பிரசாரம் செய்ய வந்த ஜோ பிடன் ஷாப்பிங் செய்தார். அப்போது கடை உரிமையாளரின் மகனிடம் பேசினார் மேலும் பரிசளித்தார் என்று செய்தி வெளியிட்டு இருந்தார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி