அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்தான்
அட்மின் மீடியா
0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.
அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரிஸ்தான்.
55 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கனவே கலிபோர்னியாவிலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற சாதனையை அப்போது அவர் படைத்தார்.