Breaking News

இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆன்லைன் செய்தி தளங்கள், ஆன்லைன் சினிமாக்கள் அனைத்தும் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியீடு.

அட்மின் மீடியா
0
ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என அனைத்தும் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியீடு.

 
 
இணையதளத்தில் வெளியிடப்படும் செய்திகள், மற்றும் திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
 
திரையரங்குகளில் மட்டும் திரைப்படம் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது, ஓடிடி தளத்தில் அதிகமாக திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியீடுவது அதிகரித்துள்ளது.
 
இதுவரை எந்தவித முன் அனுமதியும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொடர்கள் ஆகியவை ஓ.டி.டியில் வெளியிடப்பட்டு வந்தன. இனிமேல் மத்திய அரசினுடைய முன் அனுமதியை பெற வேண்டிய கட்டாயதம் ஆகும்
 
அதே போல், செய்தி இணையதளங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
தற்போது, ஓடிடி தளங்களுக்கான கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தை அமைச்சகம் பெறுவதாகவும், இந்த புதிய நடவடிக்கை குறித்து ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 
 
மேலும், இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback