பணியாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவூதி அரேபியா! முழுவிவரம்
வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா இருந்து வருகிறது. இங்கு வேலைக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் சென்றுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து சென்று பணிபுரியும்தொழிலாளர்கள் செளதியில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டுப்பணியாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக செளதி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணி மாறுதல், பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேற தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என சவுதி அரேபிய மனிதவளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்