Breaking News

கேஸ் சிலிண்டர் ஆன்லைனில் புக் செய்தால் கேஷ்பேக் கிடைக்கும் எப்படி ?

அட்மின் மீடியா
0

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சரியாக உபயோகித்தால் நாமும் பயன்பெறலாம். எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக்கிங்கிற்கு ஆன்லைனில் புக் செய்தால் சில நிறுவனங்கள் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.



டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் எண்ணெய் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் சிலிண்டர் புக் செய்ய ஊக்குவித்து வருகின்றன. 

அதன்படி ஆன்லைனில் புக் செய்து அமேசான் பே, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்த முடியும்.பேடிஎம் 50 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கிவருகிறது

Amazon Pay ஆப் மூலம் நீங்கள் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்தால் நீங்கள் செலுத்தும் பணத்தில் 50 ரூபாய் மீண்டும் உங்களுக்கே வந்துவிடும். இதை பயன்படுத்த உங்கள் மொபைலில் அமேசான் பே ஆப் இன்ஸ்டால் செய்து எல்பிஜி சிலிண்டர் புக் செய்தால் போதும்.இந்த கேஷ்பேக் செலவுகளை அமேசான் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறதே தவிர இந்த சலுகைக்கும் கேஸ் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

வெவ்வேறு தளங்களில் தள்ளுபடியும் மாறுபடும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback