பிகாரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக - நிதிஷ் கூட்டணி
பிகார் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக - முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைஎன்பது குறிப்பிடதக்கது
எதிரணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த மகாகட்பந்தன் கூட்டணி மொத்தம் 110 இடங்களில் வென்றுள்ளன.
பாஜக கூட்டணி
பாஜக 74 தொகுதிகளிலும்,
ஜேடியூ 43 தொகுதிகளிலும்
ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா (எஸ்), தொகுதிகளிலும்
விகாஸ்ஷீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் தொகுதிகளிலும்
வென்றுள்ளன. இதன் மூலம் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணிக்கு 125 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 75 தொகுதிகளும்,
காங்கிரஸ் 19 தொகுதிகளிலும்
இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேஷன்) 12 தொகுதிகளிலும்,
இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும்,
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும்
சாதித்த அசாதுதீன் ஒவைஸி
முதல்முறையாக பீகார் தேர்தலில் போட்டியிட்ட ஹைதராபாத் தொகுதி எம்பி அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்தி மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றுள்லது
பகுஜன் சமாஜ் கட்சி,
லோக் ஜன சக்தி, தலா 1 இடத்திலும் வென்றுள்ளன.
ஒரு சுயேச்சை உறுப்பினரும் இத்தேர்தலில் வென்றுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்