சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டரில் 'நிவர்' புயல்! 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்!- சென்னை வானிலை ஆய்வுமையம்
நிவர் புயல் கரையைக் கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக (நிவர்) மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும். இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.
நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கிலோ மீட்டர் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மறுநாள் (25-ம் தேதி) புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 100லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்