Breaking News

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார். 

ற்கனவே ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுவந்த பொதுமுடக்கம், தற்போதும் புது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 புதிய தளர்வுகளுடன் பொது முடக்கத்தை டிசம்பர் 31, 2020 நள்ளிரவு வரை நீட்டித்து அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.



டிசம்பர் 14 முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் 

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் டிசம்பர் 7 முதல் வகுப்புகள் தொடங்கும்

விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி

டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி

டிசம்பர் 1 முதல் உள்ள உள்அரங்கங்களில் சமுதாய ,அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள்ள அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 30.11.2020












Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback