இன்று வானில் அரிய நிகழ்வு. 2020இன் கடைசி சந்திர கிரகணம்! எங்கு, எப்படி, எப்போது தெரியும்?
2020ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்
.இன்றைய சந்திர கிரகணம் இந்தியாவில் 1.04 மணிக்கு தொடங்கி 5.22 வரை நடைபெறும். 3.13 மணிக்கு உச்சத்தில் இருக்கும்.
சந்திர கிரகணம் - இந்தியாவில் தெரியுமா?
இன்றைய சந்திர கிரகணம் இது நிகழும் பொழுது இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் இதை நம்மால் பார்க்க முடியாது. மேலும் அடிவானத்திற்கு கீழே நிலவு இருக்கும் காரணத்தால் இந்தியாவில் பார்க்க முடியாது.
ஐரோப்பா , ஆசியா , ஆஸ்திரேலியா , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா , பசிபிக் மற்றும் ஆட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும் .
இந்த ஆண்டில் ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 4 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள் ஏற்பட்ட நிலையில் இது 2020இன் கடைசி மற்றும் நான்காவது சந்திர கிரகணம்.
Tags: தமிழக செய்திகள்