FACT CHECK: பிஜேபி தலைவர்களுடன் இருப்பது உபி பாலியல் வழக்கு குற்றவாளியின் தந்தை என பரவும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காமல் குற்றவாளிகள் காப்பாற்றப்பட காரணம், குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் உடைய தந்தை தான் அவரது புகைபடம் என பிஜேபி தலைவர்களுடன் ஒருவர் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன்
இருக்கும் ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கடந்த 29-ம் தேதி
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற பகுதியில்
19 வயது இளம் பெண் மனிஷா என்பவர் அதே ஊரை சேர்ந்த உயர் சாதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக
தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சந்தீப் மற்றும் அவரது நண்பர்கள் லாவ்குஷ், ராமு மற்றும் சந்தீப் அவரது மாமா ரவி, உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ள நபர் சந்தீப் அவர்களது தந்தை இல்லை அவர் உத்தரப் பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பிஜேபி தலைவரான ஷ்யாம் பிரகாஷ் திவ்வேதி ஆவார்
மேலும் அவர் தனது பேஸ்புக்கில் பிஜேபி தலைவர்கள் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், யோகி
ஆதித்யநாத் உள்ளிட்டோர்களுடன் உள்ள பழைய புகைப்படத்தை எடுத்து தவறாக வதந்தி பரப்புகின்றார்கள்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி